Wednesday, January 11, 2012

மதுரை மீனாக்ஷி கோவில் - ஒரு 360 டிகிரி பனோரமா!

ஆல் இந்தியா ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியை நேரடி ஒலிபரப்பு செய்யும்போது, ‘நேயர்களே, இப்போது உங்களை (திருவையாறுக்கு) அழைத்துச் செல்கிறோம்’ என்று அறிவிப்பார்கள்! அது போல, உங்களை இன்று நான், மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு அழைத்துச் சென்று, கோவில் முழுவதையும் சுற்றிக்காட்டப் போகிறேன்!

கீழே உள்ள உரலியை உங்கள் கணினியில் மறு பதிவு (copy, paste) செய்து சொடுக்கினால், நீங்கள் அந்தக் கோவிலுக்குள் இருப்பீர்கள்! ஆமாம்,நண்பர்களே, இதுவும் ஒரு 360 டிகிரி பனோரமா படம். இதில் இன்னொரு விசேஷம், உங்கள் mouse தனை, நீங்கள் அசைக்கும் திசை எல்லாம் (அதாவது, பக்கவாட்டில் மட்டுமின்றி, மேலேயும் கீழேயும்) என்ன இருக்கிறதோ அதை எல்லாம் பார்க்க முடியும். தனியே, மேலே இடது மூலையில் Lay out என்ற இடத்தில் சொடுக்கினால், கோவிலில் நீங்கள் விரும்பும் இடங்களுக்கு எல்லாம் ஒரு சொடுக்கில் செல்லலாம். கூடவே,அருமையான (த்வஜாவந்தி எனும் ராகத்தில், க்ளாரிநெட் வாத்தியத்தில்) ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்னும் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனையும் துணைவரும்! முக்கியமாக, மேல் விதானங்களில் இருக்கும் சித்திரங்களைப் பார்க்கத் தவறாதீர்கள்.

இத்தகைய சுற்றுலாவுக்கு, VIRTUAL TOUR என்று சொல்வார்கள். இப்போது இந்த புது அனுபவத்தைக் காண உங்களை மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன்!

view360.in/virtualtour/madurai/

3 comments:

  1. மதுரை மீனாட்சி கோவில் லிங்க் கிடைக்கவில்லையே
    நான்தான் சரியாக லிங்க் கொடுக்கவில்லையா தெரியவில்லை

    ReplyDelete
  2. நன்றி, திரு.writeit.
    திரு.ரமணி அவர்களுக்கு, நான் பதிவில் குறிப்பிட்டிரும்படி, நான் கொடுத்திருக்கும் URL ஐ copy, paste செய்து உங்கள் address bar போட்டுச் சொடுக்கினால் கிடைக்கும். எனக்குச் சரியாக வந்தது. உங்களுக்கு வரவில்லை என்றால் google searchக்குப் போய்,Madurai Meenakshi Temple, virtual tour என்று தேடி, அதில் கிடைக்கும் பல லிங்க் களில் virtual tour ஐத் தேர்ந்தெடுத்துப் பாருங்கள். வெற்றி உங்களுக்கே! இவ்வளவு சிரமப் பட்டாலும், பலன் மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொடுக்கும் என்பதற்கு நான் கியாரண்டி!

    ReplyDelete