Monday, June 25, 2012

நன்றி, ஆனந்த (திருச்சி) விகடன்!

இந்த வாரம் (27.06.2012) வெளிவந்திருக்கும் ஆனந்தவிகடன் இதழின் இலவச இணைப்பான ‘திருச்சி விகடனில்’ வலையோசை என்ற தலைப்பில் இந்த ’விட்டு விடுதலையாகி நிற்பாய்!’ எனும் என்னுடைய வலைப்பூவிலிருந்து சில பகுதிகளை அழகான லே-அவுட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

குறையென்றும் ஒன்று இருக்கத்தானே செய்யும்?! இற்றைய பதிவுகளில் நாம் ரசித்துக் கொண்டிருக்கும் காலத்தால் அழியாத பழந்தமிழ்த் திரைப்பாடல்களைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ள வில்லை - நிச்சயமாக அதற்கு ஏதாவது சரியான காரணம் இருக்கும். எனவே, மீண்டும் என் நன்றிகள், திருச்சி விகடனுக்கு!

5 comments:

  1. தங்கள் ரசிகர்களாகிய நாங்களும்
    மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  3. திரு.ரமணி மற்றும் திரு.கோவி.கண்ணன் அவர்களுக்கு என் நன்றி!

    ReplyDelete
  4. நல்வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஐயா..

    தொடர்ந்து அசத்துங்க!

    ReplyDelete
  5. நன்றி, திரு.வெங்கட் நாகராஜ்! தொடர்ந்து பயணிப்போம்!

    ReplyDelete