Wednesday, July 18, 2012

ஒரு இடைவெளிக்குப் பிறகு!

    சில பல தவிர்க்கமுடியாத காரணங்களால்  இந்தப் பதிவுகளின் ரசிகர்களைக் காக்கவைத்தமைக்காக மன்னிக்கவேண்டுகிறேன்!

    இன்று, நமக்காக மீண்டும் பாடவருகிறார், பானுமதி. ஏவிஎம்மின் ’அன்னை’ திரைப்படத்திற்காக சுதர்சனம் அவர்கள் இசையமைப்பில் பாடியிருக்கிறார் அவர். இந்தப் பாடலைக் கேட்கும்போது, (சரணத்தில் ஒரே ஒரு இடத்தைத் தவிர) தபலாவையும் பானுமதியின் குரலையும் மட்டுமே ரசிப்பீர்கள். அவ்வளவு இனிமையான மெட்டு. படத்தில் பின்னணியாக ஒலிக்கும் குரலில் மயக்கவைக்கும் இனிமை.  ஆரம்பத்தில் வரும் வரிகளான, “பெறும் சிரமமின்றி, பிள்ளை பெற்ற’ என்ற இடத்தில் ஒரு தேர்ந்த பாடகி, நடிகை என்பதை ஒரு சிறிய நக்கலைக் குரலில் காண்பித்து, நிரூபிக்கிறார், பானுமதி!

   அந்தக் காலத்திய நாடகப்பாடல்களின் மெட்டு, அமைப்பைக் கொண்டு, தொகையறாவில் (ஆரம்பத்தில் தாளம் இல்லாமல் ஒலிக்கும் பாட்டு - இதுவே முழுப்பாடலாக இருந்தால் விருத்தம் எனப்படும்!)  தொடங்கிக் கடைசியில் உச்ச ஸ்தாயியில் முடியும் பாட்டு இது. கவிஞர் கண்ணதாசனும் விளையாடி இருக்கிறார், கவனியுங்கள்:
        “தூக்கி வளர்த்தவள் தாய் என்றால் அதை
         ஆக்கிக் கொடுத்தவள் பேரென்ன?
         வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதைத்
         தாங்கிய தாயின் உறவென்ன?”

   இனிமேலும் குறுக்கே நிற்க விரும்பவில்லை - ரசியுங்கள், நண்பர்களே!



  

5 comments:

  1. இந்தப் பாடலை முதன்முதலாக கேட்கின்றேன் ... வரிகள் அருமை ... பாடியவர்களின் குரலும் இனிமை ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு.இக்பால் செல்வன் அவர்களே!

      Delete
  2. முதல் முறை கேட்கிறேன் இந்தப் பாடலை... இனிய பாடல். தேடித்தேடி நீங்கள் தரும் இனிய பாடல்கள் அருமை. தொடரட்டும் இனிய பாடல்கள் பகிர்வு.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு.வெங்கட் நாகராஜ்! பழைய பாடல்கள் என்றாலே டிஎம்எஸ்-சுசீலா அல்லது அவர்கள் தனியே பாடிய பாடல்கள் என்று ஒரு மாயை பரவிவிட்டது! அவர்களைத் தாண்டியும் முத்துக்கள் இருக்கின்றன என்பதை எடுத்துக் காண்பிப்பது தான் நமது பதிவின் நோக்கம்

      Delete
  3. மதிப்புமிக்க பதவிக்கு நன்றி ஐயா.இது எனக்கு மிகவும் உதவுகிறது. நீங்கள் எங்களுக்கு இன்னும் ஏதாவது பரிசளிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் புதிய தலைப்புகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம்.
    Tamil Secret Story

    ReplyDelete