எதையோ தேடப்போய் எதுவோ கிடைத்தது என்பார்களே, அதைப்போல் வேறொரு பாடலைத் தேடும்போது, இந்த நல்ல பாடல் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் எப்படி?!
1970ம் வருடம், இயக்குனர் ஸ்ரீதரின் நிறுவனத்திலிருந்து ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டு சக்கைபோடு போட்டது! ஸ்ரீதரின் சிஷ்யரான என்.ஸி.சக்ரவர்த்தியின் இயக்கத்தில் வெளிவந்த ‘உத்தரவின்றி உள்ளே வா’ என்ற அந்த முழுநீள நகைச்சுவைப் படத்தில் நாகேஷ், ரவிசந்திரன், காஞ்சனா, ரமாபிரபா முதலிய அன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்கள் பலர் நடித்திருந்தனர். கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைப்பில் அருமையான பாடல்கள் பல இடம் பெற்றிருந்தன.
நாம் இன்று ரசிக்கவிருக்கும் ‘காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ’ என்ற பாடலை (எஸ்.பி.பியின் ஹம்மிங்குடன்) சுசீலா அருமையாகப் பாடியிருக்கிறார். பாடலில் ஒரு விசேஷம், தாளத்துக்கு பாடலின் பெரும் பகுதிக்கு கிடாரின் கார்ட்களும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தபலா மற்றும் பாங்கோ டிரம்ஸ் தாளமாகவும் உபயோகப்படுத்தியிருப்பதுதான். கிடாரின் துணை, சுசீலாவின் குரலை எவ்வளவு இனிமையாக்கியிருக்கிறது, கேளுங்கள்! இடை இசையில் வயலின்களும், குழலும் ஒரே ஒரு இடத்தில் சிதாரும் பாடல் முழுவதும் டபிள் பேஸின் ‘தொம், தொம்’ சத்தமும் ஒரு நல்ல மெலடியை முழுமையாக்கி இருக்கின்றன. இப்போது, சுசீலா, உங்களுக்காக:

antha paadalin humming S.P.BALASUBRAMANIAN ALLA M.L.SRIKANTH ENDRA PAADAGAR. NINAIPATHU NIRAIVERUM ENDRA HIT SONG PAADIYAVAR.
ReplyDeleteபதிவிற்கு வந்து, தவறினைத் திருத்தியதற்கு மிக்க நன்றி, திரு.சிம்மக்குரலோன் அவர்களே!
Deleteintha chinna visayame ungalukku theriyavillai !ungalaiya methaavi endru amuthavan pulambukiraar!
ReplyDeletexxx
பதிவு வெளிவந்தது 29 ஜூலை 2012ல். அதில் தவற்றினை திரு.சிம்மக்குரலோன் குறிப்பிட்டதும் அதே நாளில். என்னுடைய தவற்றை உணர்ந்து அவருக்கு நான் நன்றி கூறியது 30 ஜூலை 2012 அன்று. (கவனிக்க: 2012!) இதை தாங்கள் கண்டுபிடித்து எழுதியிருப்பது 29 ஜூன் 2013! எனக்கென்னவோ, உங்களுக்கு நான் மேதாவியாக இருப்பதை விட, திரு.அமுதவனின் சொல் தங்களை பாதித்திருப்பதாகவே தோன்றுகிறது! Anyway, thangalukkum en nanrikal!
ReplyDelete