Saturday, August 4, 2012

ஒரு Perfect மெலடி!

     இந்தப் பாடலை முதல் முறை கேட்கும்போது, ஜமுனாராணியின் குரலும், துணையாக வரும் தபலாவும் மட்டும் உங்கள் கவனத்தைக் கவர்ந்து, உயிரை ஆக்ரமித்துக் கொண்டுவிடும். பின்னர், அதனின்று ஒருவழியாக விடுபட்டுக் கவனித்தோமானால் மட்டுமே, வயலின், மாண்டலின், மகுடி, டபிள்பேஸ் போன்ற இன்னபிற வாத்தியங்களும் கவனத்துக்கு வரும்!

     எத்தனை வாத்தியங்கள் இருந்தாலும் அவற்றை சுவாரஸ்யமாகக் கோர்க்கும் வித்தையில் (மெல்லிசை) மன்னர்களுக்கு நிகரேது?

     1957ல் வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்தில் பட்டுக்கோட்டையின் எழுத்தில், ஜமுனாராணியின் ஒரு சோகமான Perfect மெலடியை, இன்றைய இசையமைப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை, ரசிக்கலாம் வாருங்கள்!

11 comments:

  1. 'எத்தனை வாத்தியங்கள் இருந்தாலும் அவற்றை சுவாரஸ்யமாகக் கோர்க்கும் வித்தையில் மெல்லிசை மன்னர்களுக்கு நிகரேது?' என்கிறீர்கள். அவருக்குப் பின்னால் வந்த ஒரு 'மகான்' எல்லா வாத்தியங்களையும் கலந்தடித்துப் பாடுகிறவர்கள் உச்சரிக்கிற வார்த்தை வெளிவராத மாதிரி பார்த்துக்கொண்டார். அதுதான் புதுமையான இசைக்கோர்ப்பு என்றும் அவருக்கு இணையாக இன்டர்லூட் கொடுக்க இன்னொருவர் இல்லையென்றும் விஷயம்புரியாமல் ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு இருக்கிறது. பட்டுக்கோட்டையாரின் எழுத்துக்கள் எல்லாம் இம்மாதிரி மக்களின் காதுகளில் ஒலிக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. இன்றைக்கு வந்திருக்கும் மகான்களை நாம் பாராட்டவேண்டும், அமுதவன்! இசையைத் தவிர்த்து இவர்கள் செய்யும் அட்டகாசத்தில்தானே நாமும் தேடிப்பிடித்து பல முத்துக்களைப் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறோம்! ராஜாஜி அவர்கள் ஒருமுறை சொன்னார்: “ஈ.வே.ரா. அவர்களைப்போன்ற பக்திமான் யாருமில்லை-அவர்தான் எப்பொழுதும் கடவுளர் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்” என்று! இது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது!!!

      Delete
    2. இன்னொரு உண்மையும் புலப்பட்டது, அமுதவன். மன்னர்களுக்கும், திலகத்திற்கும் அவர்களுக்கு முந்தையோருக்கும், நல்ல மெட்டுக்களை உருவாக்கவும், பாடல்களை மேம்படுத்தவும் மட்டுமே நேரம் இருந்தது. இன்றைய ’மகான்’களுக்கு மெட்டுக்கள் எப்படி இருந்தாலும் அதையும், தங்களையும் ‘மார்க்கெட்டிங்’ பண்ணவும் வேண்டியிருக்கிறதே!!

      Delete
  2. அருமையான பாடல்.
    ஜமுனா ராணி நல்ல பாடகர்.
    அவர் கலைஞசர் டிவியில் ஒரு வாரம் பாடினார் இன்னிசை மழைதான்.
    பட்டுக்கோட்டை சிறந்த பாடல் ஆசிரியர்.
    மெல்லிசை மன்னர்கள் இசை அமுதம்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, கோமதிஅரசு அவர்களே!

      Delete
  3. இனிய பாடல். கேட்டு ரசித்தேன். இன்று காலையில் தான் பிரபலமான சில 1951-1960-களில் வந்த பாடல்களைக் கேட்டேன். கேட்கும்போது உங்கள் நினைவுதான்!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜுக்கு என் மனமார்ந்த நன்றி! வேறெதுவும் எழுதத் தோன்றவில்லை!!!!

      Delete
  4. அருமையான கருத்து செறிவு மிகுந்த பாடல் இசையும் அருமை இன்றைக்கு இருக்கும் தலைமுறைக்கு இதை எடுத்து செல்லவேண்டியது கடமையும் கூட

    ReplyDelete
    Replies
    1. இது மாதிரியான பாடல்களின் தன்மையே இதுதான்! எப்போது கேட்டாலும் உங்களை உலுக்கிவிடும்! ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், நீங்களும் ரசித்து, எனனையும் மகிழ்வித்திருக்கிறீர்கள், கோவை மு சரளா அவர்களே! நன்றி!

      Delete
  5. காமுகர் நெஞ்சில் பாடலை இயற்றியவர் ஏ. மருதகாசி, பட்டுக்கோட்டையார் அல்ல

    ReplyDelete
  6. திருத்தியதற்கு நன்றி!

    ReplyDelete