Friday, April 29, 2011

குறுக்கு வழி!

நம்ம சொலவடை (குமுதம் பாணியில்: சா.ஆ.ச.ஆ) மீண்டும் நினைவுக்கு வந்தது. சென்றமாத என்னுடைய தொலைபேசி பில் ரூ.1200/-. ரிடையரான நமக்குக் கட்டுப்படி ஆகவில்லை. ‘வேண்டியும் இருக்கு, வேதனையும் பண்றது’ என்று எதைப்பற்றியோ சொல்வார்களே, அதுபோல தொலைபேசி இல்லாமலும் முடியாது. வலைத்தொடர்பு அவசியமில்லையா? எனவே, ஆராய்ச்சி செய்து (!) ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடிச்சுட்டோம்ல! ராத்திரி (இளங்காலை?) 2 மணிமுதல் 8 மணி வரை வலையில் இலவசத் தேடல் உண்டு என்றறிந்து, விடிகாலையில் எழுந்த மாதிரியும் ஆச்சு, வலையில் மேய்ந்ததாகவும் ஆச்சு என்று, தினமும் காலை 5.30க்கே எழுந்து மேய்ச்சலை ஜோராக நடத்திக்கொண்டிருக்கிறேன்! போனஸாக, அமெரிக்காவிலிருக்கும் என் மருமகளும் என்னுடன் தினமும் சாட்டிக்கொண்டிருக்கிறாள்!

1 comment:

  1. நீங்க ரொம்ப லேட் போல.... நிறையப்பேர் விடிகாலை எழுந்து காலை எட்டுமணிவரை வலைமேய்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்ம ஐடிஐ நண்பரொருவர் எந்தப் பத்திரிகையும்கூட வாங்குவதில்லையாம்.தமிழ் ஆங்கிலப்பத்திரிகைகள் எல்லாமே காலை ஐந்தரை மணியிலிருந்தே கிடைக்கின்றன. எல்லாவற்றையும் காலை ஏழரைக்குள்ளே படிச்சுமுடிச்சிடறேன்.நீங்க எதுக்கு எல்லா தினசரிகளையும் காசு கொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அந்த நண்பர்.

    ReplyDelete