Wednesday, December 7, 2011

கன்னங்கருத்த கிளி!


நம்மை இன்று மகிழ்விக்கவிருக்கும் பாடல், ஒரு நாட்டுப் புற மெட்டு. சிவகங்கைச் சீமைதிரைப்படத்திற்காக மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில் கண்ணதாசனின் பாடல். இன்றைய குத்துப் பாட்டின் முன்னோடிகளில் ஒன்று! ஒரே வித்தியாசம், இத்தகைய குத்துப்பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை!

‘கன்னங் கருத்த கிளி,

கட்டழகன் தொட்ட கிளி,

அன்ன நடை போட்டாளடி என் செல்லம்மா,

சொன்ன மொழி கேட்டாளடி!என்று

தோழியரின் துணை கொண்டு நாயகி (குமாரி கமலா) பாடுகிறாள்.

நாம் ஏற்கனவே கேட்டு ரசித்த பழம் பெரும் பாடகி பி.லீலாவின் கம்பீரமான குரலில் வருகிறது இப் பாடல். அவரின் குரலோடு இசைந்து மாண்டலினும் வருகிறது! சொல்லப் போனால், இந்த பாடல் முழுவதும், மாண்டலின், குழல், டோலக், தபலா, டபிள் பேஸ், இவற்றின் ஆட்சி தான்! வயலின் கூட, சரணங்களை இணைப்பதற்காக ஒரு மிகச்சிறிய பீஸ் தான் உபயோகித்திருக்கிறார்கள். பாட்டின் ஆரம்பத்திலும், பல்லவியிலும் டோலக் புகுந்து விளையாடுகிறது! அதேபோல, கோரஸ் பாடுபவர்களின் குரல்களும் பாடலை என்னமாக மெருகேற்றியிருக்கிறது, கவனியுங்கள். மொத்தத்தில் ஒரு உயிர்ப்பான துள்ளல் அனுபவம், இதோ உங்களுக்காக!

Kannangaruththa kili by Krishnamurthy80

இன்னொரு பாடலோடு, மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

2 comments:

  1. இந்தப் பாடலை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. செம சூப்பர்.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,விச்சு அவர்களே!

    ReplyDelete