Sunday, April 22, 2012

வராமல், வந்து, வராமலே போன பாடல்!


இன்றைக்கு 47 வருடங்களுக்கு முன்னர் (1964ல்) வெளிவந்த ‘கர்ணன்’ தமிழ்த் திரைப்படம், இப்போது மறு வெளியீடாக வந்து மற்ற புதிய படங்களையும் ஓரம் கட்டிக்கொண்டிருப்பதைப் பற்றி நேற்றுப் பார்த்தோம். அந்தப் பதிவில் இன்னொரு ’வராமல் வந்த பாடல்’ ஒன்றை உங்களுக்கு அளிப்பதாய்க் கூறியிருந்தேன். அதாவது, நீங்கள் இன்று ரசிக்கப் போகும் பாடல், ‘கர்ணன்’ முதலில் வெளியானபோது படத்தில் இடம் பெறவில்லை! சில வாரங்கள் படம் ஓடியபின்னர் சேர்க்கப் பட்டது. (இதே போல ஒரு மிக நல்ல மெலடியான ‘தென்றல் வரும்’ என்ற சுசீலாவின் பாடல், படத்தின் நீளம் காரணமாக, ‘பாலும் பழமும்’ படத்திலிருந்து நீக்கப் பட்டது!) இப்போது, நேற்றுப் பார்த்த ‘கர்ணன்’ படத்திலும் நமது இன்றைய பாடலான ‘மகாராஜன் உலகை ஆளுவான்’ என்ற அருமையான டூயட் நீக்கப் பட்டிருக்கிறது! (அப்பாடா, தலைப்பு, புரிந்ததா?!) கர்நாடக சங்கீதத்தில் ஒரு முக்கியமான ராகமான கரகரப்ரியா எனும் ராகத்தில் புனையப் பட்ட மெட்டு இது. இந்தப் பாடலைக் கேட்டதும், உங்களுக்குத் தானாகவே இன்னொரு பாட்டு நினைவுக்கு வரும், வரவேண்டும்! ‘இருமலர்கள்’ படத்திற்காக எம்.எஸ்.வி இசையமைக்க, டி.எம்.எஸ். பாடியிருக்கும் ‘மாதவிப் பொன்மயிலாள்’ என்ற பாட்டும் இதே ராகத்தைத் தழுவியதுதான். இதற்குப் பல ஆண்டுகள் முன்னரே மன்னர்களின் ஆரம்பகாலத்தில் ‘பாசவலை’ படத்திலும் ‘அன்பினாலே உண்டாகும் இன்பநிலை’ என்று ஸி.எஸ்.ஜெயராமன் இதே ராகத்தில் பாடியிருக்கிறார்! கண்ணதாசன் எழுத, டி.எம்.எஸ்-சுசீலா பாட, நீங்கள் ரசியுங்கள்!

8 comments:

  1. மிகவும் இனிமையான பாடல். இதுவரை கேட்ட நினைவில்லை.... பகிர்வுக்கு மிக்க நன்றி RSK சார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, வெங்கட் நாகராஜ் ஸார்!

      Delete
  2. Replies
    1. நன்றி, திரு.சந்தோஷ்!

      Delete
  3. அருமையான பாடல்... கேட்க சுகமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, திரு.விச்சு! நமது நோக்கமே பழைய பாடல்களின் சுகத்தை மீண்டும் அநுபவிப்பதுதானே!

      Delete
  4. கேட்டு ரசித்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete