Thursday, March 5, 2009

என்ன கொடுமை சார் இது! - 2

எனக்கு மிகவும் வேண்டிய பையன் ஒருவனுக்கும் சமீபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். பையன் லண்டனில் வேலை செய்துகொண்டிருக்கிறான். அவன் அங்கிருந்து வந்து ஒரு இடத்தில் பெண் பார்த்து, இரு தரப்பினரும் பேசி முடித்து, திருமணத்திற்கு நாளும் பார்த்தும் விட்டனர். திருமணத்திற்கு வேண்டியவைகளை மும்முரமாகத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். திருமணப் பத்திரிகையை ப்ரூப் பார்க்க வேண்டி, மணமகனுக்கு அனுப்பத் தயாராக இருந்த அவன் தந்தைக்கு, மணமகன் போன் செய்கிறான். அப்போதுதான் அவனுக்கு மணப்பெண்ணிடம் இருந்து போன் வந்ததாம். என்ன சொன்னாளாம்? தனக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று. இவன், எதனால் என்று கேட்டதற்கு, உன் மேல் ஏதும் வருத்தமில்லை எனக்கு, ஆனால் நான் ஏற்கனவே இன்னொருவனைக் காதலிக்கிறேன் என்றாளாம்! நம்ம பையன், அந்தக் காதல் ஒரு தலையா, இரு தலையா என்று கேட்டானாம். இருதலைதான் என்று கன்பர்ம் செய்த பெண், ஒரு குண்டையும் தூக்கிப் போட்டாளாம், "அண்ணா, இந்த விஷயத்தை என் பெற்றோரிடம் எப்படித் தெரிவிப்பது என்று எனக்கு அச்சமாக இருக்கிறது, தாங்கள் தான் எப்படியாவது அவர்கள் சம்மதத்தை வாங்கித் தரவேண்டும்" என்று! உடனே நம்ம பையன் , அம்மா, இந்த வேலையெல்லாம் பார்க்க எனக்குத் தெரியாது, நீயாச்சு, உன் அப்பனாச்சு, என்னை ஆளை விடம்மா என்று கழண்டு கொண்டானாம்! இதைத்தன் தந்தையிடம் சொல்லி, நாகரீகமாக இந்த பந்தத்தில் இருந்து வெளியே வரவைத்தான். பின்னர், அவன் சொந்தத்திலேயே பெண் கிடைத்து, திருமணமும் நடந்து, இருவரும் இப்போது ஜாம்ஜாமென்று லண்டனில் தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படி இருக்கு!

2 comments:

  1. இதுபோலவே எனக்கு தெரிந்தவர் வீட்டிலும் நடந்தது.இம்மாதிரி சம்பவங்கள் நடப்பதற்கு பெற்றோர்களே காரணம். பெண்ணை கலந்து ஆலோசிக்காமல், அவளின் மனதை புரிந்து கொள்ளாததின் விளைவுதான் இது. இக்கால பெண்களில் சிலர் வேலைக்கு செல்வதாலும் பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்து இருக்காத காரணத்தாலும் அவர்கள் முன் போல் பெற்றோர் பார்க்கும் பையனைத்திருமணம் செய்ய விரும்புவது இல்லை. பெற்றோர்கள்தான் திருமணம் பற்றிய முடிவு எடுக்குமுன் பெண்ணை பல முறை கலந்து பேசி அவளின் விருப்பத்தை அறிந்து செயல் பட்டால் இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்காது.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை, நண்பரே. எந்தப் பெற்றோருமே, தம் பெண்ணின் சம்மதம் முடிவாகத் தெரியாமல் திருமண ஏற்பாடுகள் வரை செல்ல மாட்டார்கள் என்பது என் கருத்து. இக்காலப் பெண்களின் அலைபாயும் மனதும், கோழைத்தனமும், திமிரும், மொத்தத்தில் ஈகோவும் இத்தகைய விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்!

    ReplyDelete