நமக்கு ஆஸ்கர் வாங்கித்தந்திருக்கும் இந்தியர்கள் இருவருமே இஸ்லாமிய சகோதரர்கள் என்பதைக் கவனித்தீர்களா? அவர்கள் ஆஸ்கர் விருது பெற்றதும் மேடையில் கூறியவை, நமது இறையாண்மையைப் பற்றிப் பெருமைப் பட்டு,மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.
’எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று தீந்தமிழில் ஒருவர் நம் கண்ணில் நீர் வரவழைத்தார். இன்னொருவரோ, இன்னும் ஒரு படி மேலே போய், ஓம் எனும் தத்துவத்தை உலகுக்குப் பிரகடனம் செய்திருக்கிறார்!
இதுவல்லவோ நமது கலாசாரம்! நெஞ்சை நிமிர்த்தி,நமது தேசத்தைப் பற்றிப் பெருமை கொள்ள இந்த மாதிரி சந்தர்ப்பங்களின் இடைவெளி அதிகமாகிக் கொண்டே வருகிறதையும் கவலையோடு கவனித்துக் கொண்டு வருகிறேன். எனினும், நம்பிக்கை தானே வாழ்க்கை! ஜெய் ஹிந்த்!
தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. ஹிப்போக்ரசி என்பதற்கு சரியான தமிழ் சொல் 'படிற்றொழுக்கம்' என்பதாகும். இது எவ்வளவு பேருக்கு தெரியும் எனத்தெரியவில்லை. ஆனால் தமிழ் அகராதியில் இதற்கு தான் நம்பாத, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ReplyDeleteமன்னிக்கவும். தங்களது வேறொரு பதிவுக்கு எழுதியது தவறுதலாக இந்த பதிவில் வந்துவிட்டது.
ReplyDeleteநன்றி, ஸார். படிற்றொழுக்கம் என்றெழுதும் போதெல்லாம் ஹிப்போக்ரஸி என்றும் எழுதி பயிறுவிக்க முயற்சிப்போம்.
ReplyDelete