Friday, January 6, 2012

ஒரு புதிய கலை!

”கொம்பிலே பழம் பழுத்துத் தொங்குறதும் கலை,
லவ்விலே மனம் மயங்கிப் பொங்குறதும் கலை,
வீதியிலே கர்ணம் போட்டு ஆடுறதும் கலை,
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும் கலை” என்று
சந்திரபாபுவின் குரல் மூலம் ‘பதிபக்தி’ படத்தில் சொன்னவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! அதாவது, கலையின் வடிவங்கள் எண்ணிறந்தவை. மேல் நாடுகளில் அப்படிப்பட்ட கலைகளில் ஒன்றுதான் 'BOOK CARVING' என்பது. பழைய, பெரிய புத்தகங்களைக் கலையழகோடு ’குடைந்து’ தயார் செய்யும் ஒரு சிற்ப வடிவம். அத்தகைய வடிவங்களில் பொறுக்கியெடுத்த ஐந்து சிற்பங்களின் படத்தைப் பார்த்து வியக்கலாம், வாருங்கள்,நண்பர்களே! படங்களின் மேலே சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.





2 comments:

  1. இதுவரை அறிந்திராத புதிய விஷயம்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்
    என் நண்பர் ஒருவருக்கு பாட்டும் பரதமும் படத்தில்
    சிவ்காமி ஆடிவந்தாள் என்கிற பாடலின்
    வீடியோ காட்சி தேவையாக உள்ளது
    எப்படித் தேடியெடுப்பது என்ச் சொல்ல முடியுமா
    நான் தேடிய மட்டில் ஆடியோ மட்டுமே கிடைக்கிறது
    முடிந்தால் உதவுங்கள்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. உங்கள் ரசிப்புக்கு என் நன்றிகள், திரு.ரமணி. தங்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன். தங்களை விரைவில் தொடர்புகொள்கிறேன்.

    ReplyDelete