கடவுள் படைத்த மனிதன் தனது ஆறறிவினால் உலகத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகளில் ஒன்று புகைப்படக்கலை. இந்தப் பதிவின் மூலமாக நாம் ஏற்கனவே சில (’மாக்ரோ’ எனப்படும்) மிக அண்மைப் படங்களைக் கண்டோம்.(காண்க: நீர்த்துளியும் புகைப்படமும் பகுதி 1 & 2). இன்று, உங்களுக்கு ஒரு விடியோவை அறிமுகம் செய்யவிருக்கிறேன்.
இதில் என்ன விசேஷம்? மகரந்தச்சேர்க்கை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சி உருவாவதும் தெரியும். வௌவால் மலர்களிலிருந்து தேன் உறிஞ்சுவதைப் பார்த்திருக்கிறீர்களா? காய்கள் கனியாவதை மிக அருகிலிருந்து ரசித்திருக்கிறீர்களா? இவை அனைத்தையும் மட்டுமின்றி இன்னும் பல காட்சிகளையும் இந்த மாக்ரோ விடியோ உங்களுக்குத் தந்து, உங்களை வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்லப் போகிறது! வாருங்கள், இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதையும், நாம் ஏன் அதை பாதுகாக்க வேண்டுமென்பதையும் அறிந்து கொள்வோம்!
நம்மைச் சுற்றி இவ்வளவு அழகான நிகழ்வுகளா
ReplyDeleteகாணொளி பார்த்துப் பிரமித்து போனேன்
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் த்ங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
மனிதனின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான கணினி மற்றும் வலையின் வீச்சு அளவிடமுடியாதது. ஒன்று நன்றாக உருவானால் அதைக் கூடிய மட்டிலும் சிதைத்துப் பார்க்கும் மனிதர்களும் நம்மில் ஏராளமல்லவா? வலையில் கொட்டிக் கிடக்கும் இம்மாதிரியான ரத்தினங்களை (என்னுடைய வட்டம் சிறியதானாலும்)உங்களைப்போன்ற ரசிகர்களிடம் சேர்ப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் செயல்! தங்களின் பாராட்டுக்கும், பொங்கல் வாழ்த்துக்களுக்கும் நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் பொங்கல் நல்நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபிரமாதம்.
ReplyDeleteநன்றி, அமுதவன்!
ReplyDelete