Tuesday, January 10, 2012

லண்டன் பனோரமா!

புகைப் படங்கள் எனும்போது, நமக்குத் தெரிந்ததெல்லாம் கருப்பு-வெள்ளை அல்லது வண்ணம் என்பதே. இப்போது கணினிகள் காலம்! எங்கள் காலத்தில் இருட்டறையில் மணிக்கணக்கில் நாங்கள் செய்தவற்றைத் தவிர, சாதாரணம், மிகு அடர்த்தி என்று பிலிம் இல்லாமல் என்ன வேன்ண்டுமானாலும் ஒரு சொடுக்கில் செய்ய முடிகிறது. இந்தத் தொழில் நுட்பத்தில் (panorama)எனப்படும் 360 டிகிரி (அதாவது முழு வட்ட திசைகளில்) நாம் பார்ப்பவைகளை எல்லாம் ஒரே படத்தில் கொண்டுவந்து, உங்கள் கணினியின் எலி (mouse!) மூலமாக நாம் பார்க்கும் வேகத்தையும் கட்டுப் படுத்தி படத்தை அனுபவிக்க முடிகிறது. அனேகமாக எல்லா ஐரோப்பிய சுற்றுலாத்தளங்களுக்கும் இத்தகைய படங்கள் வலையில் கிடைக்கின்றன. இன்று நான் உங்களுக்குத் தருவது லண்டன் மாநகரத்தின்
மிகுஅடர்த்தி பனோரமா. கீழே கொடுத்திருக்கும் வலைத்தளத்தைச் சொடுக்கினால் நீங்கள் அனுபவிக்கலாம்.


London in Detail | Gigapixel London Panorama | London Photographer

4 comments:

  1. காணக்கிடைக்காத அரிய காட்சி
    தொழில் நுட்பத்தின் வீச்சு நமக்கு
    எத்தனை சௌகரியங்களை அள்ளித் தருகிறது
    ரசித்ததை அனைவரும் அறியக் கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி, திரு.ரமணி!

    ReplyDelete
  3. வாவ்!
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி, செ.பி.அவர்களே! இன்னொன்று, அந்த படத்தில் மேலே (வலதுபக்கம்) 360 என்னும் எண்ணின் மேல் சொடுக்கினால் இன்னும் ஏராளமான அற்புதமான பனோரமாக்கள் கிடைக்கின்றன!

    ReplyDelete