நமது நாட்டைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் எனும் ஒடீசியக் கலைஞர் மணல் சிற்பங்கள் வடிப்பதில் உலகப் புகழ் பெற்றவர். இவரின் கடற்கரை ஓர மணல் சிற்பங்கள் பரிசு வாங்காத இடமே உலகில் இல்லை எனலாம்.பல ஊடகங்களில் இவரின் கைவண்ணத்தைப் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், இன்று நீங்கள் பார்க்கப் போகும் விடியோ, மணல் ஓவியம் பற்றியது.இலானா யாஹவ் எனும் பெண் கலைஞர் தீட்டியது.
'ஒரு மனிதனின் கனவு’ என்று தலைப்பிடப்பட்ட இந்த ஒவியத்தைத் தீட்ட, இவர், வண்ணங்களையோ, பிரஷ்களையோ உபயோகிக்கவில்லை! ஒரு கண்ணாடிப் பலகையின் மேலே மணலைத் தூவிவிட்டுத் தன் வலது கையையும் விரல்களையும் உபயோகித்து எத்தனை விதமாக உங்களைக் கவர்கிறார், பாருங்கள்! இந்தக் கலை, உங்களை உண்மையில் வியப்பின் உச்சிக்குக்கொண்டுபோகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை! இதோ, இலானா யாஹவ்:
இது வரை கண்டிராத அதிசயம் !அருமை! .
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கூடல்பாலா அவர்களே!
ReplyDeleteபடிப்படியாக, தொடர்ச்சியாக என்ன கைவண்ணம் எத்தனைக் கற்பனை..ஒரேயொரு சின்ன தவறுகூட வராமல் கிடுகிடுவென்று அடுத்தடுத்த சித்திரங்களை ஆக்கிக்காட்டும் அற்புதம்.....பார்க்க வாய்ப்பளித்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.

ReplyDeleteநன்றி, அமுதவன்!
ReplyDelete