நன்றி, நண்பர்களே!
இது, தமிழ்த் திரையிசை பாடலைத் தாங்கிவரும் என்னுடைய ஐம்பதாவது பதிவு.
இந்தப் பதிவுகளின் மூலம் எனக்கு இரண்டு பெரிய பலன்கள்! என்னுடைய ரசிகத்தன்மை மேம்பட்டது என்பதோடு, முக்கியமாக வலைத்தளத்தில் நிறைய நண்பர்களிடம் என்னை அடையாளம் காட்டியிருக்கிறது! மீண்டும் நன்றி!!
இன்றைய பாடல், வெளிவந்த நாளிலிருந்து என்னுடைய ’பேஃவரைட்’ இந்த ‘வெண்ணிலாவும் வானும் போலே’ என்ற பாரதிதாசனின் பாடல், 1954ல் வெளிவந்த ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. பி.ஆர்.பந்துலு தயாரித்த இந்தப் படத்துக்கு, இயக்குனர் பி.நீலகண்டன்.சிவாஜி, பத்மினி, ராகினி, டி.ஆர்.ராமச்சந்திரன் நடிக்க, டி.ஜி.லிங்கப்பா இசையமைத்திருந்தார். .(இவருடைய இயற்பெயர், பார்த்தசாரதி! இந்தப் பெயரில் இசையமைக்க விருப்பப் படாததால், பந்துலு, தனது தாய்மொழியான கன்னடதேசப் பெயரான ‘லிங்கப்பா’ என்று மாற்றினாராம்.) ஆனால், நமது இன்றையப் பாடலுக்கு லிங்கப்பா இசையமைக்கவில்லை! அந்தத திரைப்படத்தில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தண்டபாணி தேசிகர் என்ற கர்நாடக சங்கீத விற்பன்னர் இசையமைத்திருக்கிறார். (பந்துலுவின் ‘முதல் தேதி’ படத்திலும் தேசிகர், ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தார்!) இன்றைய நமது பாடலை ராதா (ஜெயலக்ஷ்மி) பாடியிருக்கிறார். அருமையான மெட்டு, பாரம்பரிய இசை கேட்டு ரசிக்க வாருங்கள்!
அருமையான பாடலை இதுவரை அறியாத பல
ReplyDeleteஅரிய தகவல்களுடன் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, திரு.ரமணி! கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தைப் பற்றிய இன்னொரு சுவாரசியமான தகவல் இதோ: இந்தப் படம் வெளிவருவதற்கு முன்னர், இதே கதையை, சென்னையிலே, தெலுங்கு நாடகமாகப் போட்டார்களாம். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதே, அந்த நாடகாசிரியர், படத்தின் தயாரிப்பாளர் பந்துலுவை கோர்ட்டுக்கு இழுத்துவிட்டாராம். அந்த விசாரணயின் கோர்ட் நடவடிக்கைகள், படத்தைவிடக் காமடியாக இருந்ததாம்! நாடகாசிரியர், ஒவ்வொரு ஸீனாக நடித்துக் காட்டிக் கொண்டிருந்தாராம். ஒரு தடவை, “நான் பர்ஸ்ட் க்ளாஸ், நான் பர்ஸ்ட் க்ளாஸ்” எனும் போது நீதிபதி எதற்காக இரண்டு தடவை சொல்லுகிறீர்கள் என்றாராம். அதற்கு, ‘நான் இரண்டு முறை எம்.ஏ. பர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் செய்திருக்கிறேன், ஆனால் ”அந்த” மாமா இல்லை” என்றாராம் கோர்ட்டே அதிரும்படி! கேஸ் தோல்வியடைந்து, படம் பெரும் வெற்றி பெற்றது வேறு கதை! (நன்றி: ராண்டார் கை, இந்து நாளிதழ்)
ReplyDelete