Friday, February 10, 2012

மனிதனின் படைப்பும் கடவுளின் படைப்பும்!

நண்பர்களே!

இன்று உங்களுக்கு மனிதனின் கண்டுபிடிப்பான புகைப்படக் கருவி (Camera) வின் மூலம் செய்யப் படும் ஒரு புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்யவிருக்கிறேன்.

புகைப்படம் எடுப்பதற்கும், சினிமா எடுப்பதற்கும் தனித் தனி காமெராக்கள் இருப்பதை அறியாதார் இலர். நீங்கள் இன்று பார்க்கப் போகும் விடியோக் காட்சி, புகைப்படத்திறகான காமிராவினால், Time lapse எனும் முறையில் சுடப்பட்ட நகரும் படம். இது எப்படி சாத்தியமாகும்? புகைப்படக் காமெராவை உபயோகித்து, 3 அல்லது 4 செகண்டுகளுக்கு ஒரு படம் என்று எடுத்து, அதனைக் கணினியின் உதவியால் நகரும் படமாக்கியிருக்கிறார்கள்.

இன்று இம்மாதிரியான இரண்டு மிகு அடர்த்தி (HD)விடியோக்களைப் பார்த்து வியக்கப் போகிறீர்கள்! முதலாவது விடியோ,அனைத்துலக விண்வெளி ஸ்டேஷன் என்னும் செயற்கைக்கோளிலிருந்து புகைப்படக் காமெராவால் சுடப்பட்டது. இதில் ஏறத்தாழ 18 வகையான கடவுளின் படைப்பை மனிதனின் படைப்பின் மூலம் கண்டு வியக்கலாம், வாருங்கள்!



இன்னொரு விடியோ, கனடா நாட்டிலுள்ள அழகிய நகரமான வான்கூவரில் எடுக்கப்பட்டது. இதில் மேகக் கூட்டங்களின் நடுவே நகரத்தின், நதியின் அழகு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கிறது.

5 comments:

  1. காணக் கிடைக்காத அரிய காணொளி
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. வருகைக்கும் எப்போதும் அளிக்கும் உற்சாகத்திற்கும் நன்றி, திரு.ரமணி அவர்களே!

    ReplyDelete
  3. நான் தங்கள் பதிவுகளின் தீவீர ரசிகன்
    என்வே எனக்கு கிடைத்த விருதினை
    தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
    என்னுடைய பதிவினிற்கு விஜயம் செய்ய வேணுமாய்
    அனபுடன் வேண்டுகிறேன்

    ReplyDelete
  4. நன்றி, திரு.துரைடேனியல் அவர்களே!
    திரு, ரமணி,நிச்சயமாய்! பார்த்துப் பதிவிடுவதில் எனக்கு அளப்பரிய மகிழ்ச்சி! மீண்டும் நன்றி!

    ReplyDelete