Saturday, February 18, 2012

நிழல் ஆட்டம்!

நண்பர்களே,
இந்த விடியோ உங்களை வியப்பில் ஆழ்த்தவில்லை என்றால் உங்கள் ரசனை மீதுதான் சந்தேகம் வரவேண்டும்!

நிழல் ஆட்டம் பார்த்திருப்போம். சாதாரணமாக ஒருவர் வெளிச்சமிடப்பட்ட திரைக்குப் பின்னால் இருந்து, மனிதன், பறவை, முயல், மான் என்று விரல்களாலேயே நிழலாக உருவாக்கிக் காட்டுவார். ஆனால் இந்த (கொல்கத்தாவில் தயாராகியிருக்கும்) ’கொல்கத்தாவை ரசிக்க வாருங்கள்’ என அழைக்கும் இந்த விடியோவில், மனிதனின் மூளைக்குள்தான் எத்தனை யோசனை, எத்தனை திறமை என்று வியப்பை வெளிப்படுத்தவும் மறந்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்! கொல்கத்தாவின் பிரபல இடங்களான காளி கோவில், ஹௌரா பாலம், அதன் கீழே நீரில் மிதக்கும் படகு, தலைமைச்செயலகம் (பின்னணியில் நமது தேசீயகீதத்துடன்)என்று அந்த நகரத்தோடு ஒன்றிய எல்லாவற்றையும் மட்டுமல்ல, மக்கள் கூட்டத்தையும் கூட விடவில்லை! அருமையான பின்னணி இசையோடு வரும் இந்த அசாதாரண விடியோ, இதோ, உங்களுக்காக!

7 comments:

  1. மிகவும் அற்புதம்...சொல்ல வார்த்தைகளே இல்லை....

    ReplyDelete
  2. ஆமாம் நண்பரே! எழுதுவதற்கும் வார்த்தைகளின்றிக் கஷ்டப்பட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மதுமதி அவர்களே!

    ReplyDelete
  3. பகிர்விற்கு நன்றி. குறை கூற முடியாத அற்புத படைப்பு இது. நம் கைகளால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை.

    ReplyDelete
  4. நல்லாத்தான் தேடித்தேடிப் போடறீங்க வீடியோக்களை. நாம ஐடிஐயில் பணியாற்றிய சமயங்களில் நம்ம தொழிற்சாலையில் இந்த ஷேடோ விரல்கலைஞர் ஒருவர் இருந்தார் நினைவு இருக்கிறதா? அவ்வப்போது நண்பர் தேசிகன் அவரது அலுவலகத்துக்கு இவரை வரவழைத்து இந்தக் கலைகளைச் செய்யச்சொல்லுவார்.(அட, உணவு வேளைகளில் என்று வைத்துக்கொள்வோமே.)பிறகு அந்த நண்பர் கே.பாலச்சந்தரின் ஒரு படத்தில் இந்த வித்தைகளை நிகழ்த்திக்காட்ட டைட்டில்களிலும் வேறுசில காட்சிகளிலும் சரிதா இதனைச் செய்வதுபோன்று கேபி அழகுற காட்டியிருந்தார் என்று ஞாபகம். உங்கள் தளத்தில் இந்த வீடியோக்கள் பார்த்ததும் இந்த நினைவுதான் வருகிறது.

    ReplyDelete
  5. அதுவும் கடவுள் அருளால் என்பது உணரப்படவேண்டிய ஒன்றல்லவா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நண்பர் தமிழ் இனியன் அவர்களே!

    ReplyDelete
  6. நல்ல பதிவு... நன்றி.. வருகை தாருங்கள் உங்களை அன்போடு அழைக்கிறது www.sinthikkavum.net

    ReplyDelete
  7. எனக்கும் அவர் நினைவு வந்தது, அமுதவன். அவ்ர் பெயர் ராகவேந்த்ர ராவ்தானே? மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி சொன்னதுபோல, பழைய நினைவுகள்தானே புதிய சிந்தனைகளின் அடிப்படை?! வருகைக்கும், கருத்துக்களுக்கும், பழைய நினைவுகளைக் கிளறியதற்கும் ஸ்பெஷல் நன்றிகள், அமுதவன்.

    ReplyDelete