Monday, May 14, 2012

ஒரு அருமையான காதல் பாடல்!


எம்.எம்.ஏ.சின்னப்பதேவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர். அவரைக் கதாநாயகனாக வைத்துப் படம் எடுப்பதாக செய்தி வந்த உடனேயே எல்லா ஏரியாக்களுக்கும் வியாபாரம் முடிந்து, அந்தந்த வினியோகஸ்தர்களிடமிருந்து வசூலான முழுப் பணத்தையும், படத்தின் பூஜையன்று முருகன் படத்தின் முன் கட்டுக் கட்டாகக் குவித்து வைப்பார், தேவர்! அத்தோடு மட்டுமின்றி, படத்தின் பூஜையன்றே ரிலீஸ் தேதியையும் அறிவித்து, ஒரு முறை கூடத் தவறாமல் செய்து காட்டியவர் அவர். எம்ஜிஆரை வைத்து எடுத்த எல்லாப் படங்களிலும் இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என்பது வியப்புக்குறிய செய்தி! தேவரின் முதல் சொந்தப் படம், ‘தாய்க்குப் பின் தாரம்’. 1956ல் வெளிவந்த இந்தப் படத்தில் எம்ஜிஆருடன் பானுமதி நாயகியாக நடித்திருந்தார். மாமா கே.வி.மகாதேவன் இசையில் பல அருமையான பாடல்களைக் கொண்டிருந்த படம் தா.பி.தா! இதில் பானுமதி, நாம் ரசிக்க விருக்கும் இன்றையப் பாடலைத்தவிர, ஏ.எம்.ராஜாவுடன் ஒரு சோகப் பாடலும், தனியே ’அசைந்தாடும் தென்றலே’ என்ற பாடலையும் பாடியிருந்தார். 'ஆஹா நம் ஆசை நிறைவேறுமா’ எனும் இந்த அருமையான மெட்டிற்கான பாடலை லக்ஷ்மணதாஸ் என்பவர் எழுத, பானுமதியின் உயர் ஸ்ருதிக்கேற்ப கொஞ்சம் அடக்கமாகவே பாடியிருக்கிறார், டிஎம்எஸ்! பியானோ கார்ட்ஸ்களும், ‘தொம், தொம்’ என்று தாளம் மற்றும் ஸ்ருதியோடு ஒலிக்கும் டபிள் பேஸ் (பெரீய்ய வயலின் போலிருக்கும்) வாத்தியமும் ஒலிப்பதிவின் துல்லியத்தைப் பறைசாற்றுகின்றன. இப்போது பாடலை ரசிப்போமா, நண்பர்களே!

2 comments:

  1. உங்களுக்காக மறுபடியும் கேட்டுவிட்டேன். அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ பாடலும் மிக அருமையான பாடல். இன்றைய ஜெயலலிதாபோல ஒரு பயங்கர தெனாவெட்டு பானுமதியின் குரலில் எப்போதுமே ஒலிக்கும். அவருடைய பாடல்களுக்காக மட்டும் அந்தத் தெனாவெட்டை ரசிக்கலாம்.

    ReplyDelete
  2. நன்றி, அமுதவன்! பானுமதியின் தெனாவெட்டு பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேனே!

    ReplyDelete