இன்று நீங்கள் காணவிருக்கும் படங்கள் உங்களை மலைக்கவைக்கும் என்பது உறுதி!
கம்போடிய நாட்டைச் சேர்ந்த இந்தச் சிறுவனும், ஆறடி நீளமும் 100 கேஜி எடையும் கொண்ட ஒரு மலைப்பாம்பும் சகோதர சகோதரி போலப் பழகி வருகிறார்களாம்!
இந்தச் சிறுவன் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, அவனுக்கு அருகில் சுமார் இரண்டு அடி நீளத்தில் இந்த மலைப்பாம்பு படுத்திருந்ததைப் பார்த்திருக்கிறார், அவன் தந்தை. அவர், பாம்பைக் கொல்லாமல் அருகிலிருந்த காட்டில் கொண்டு போய் விட்டிருக்கிறார். மறுநாள் மீண்டும் அந்தச் சிறுவன் அருகே பாம்பு காணப்பட்டதாம். இப்படி மூன்று முறைகள் அதே இடத்திற்கு வந்த பாம்பை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஒரு பையனையோ அல்லது ஒரு குதிரையையோ விழுங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் இந்தப் பாம்பின் ஆகாரம், கோழிகளும் வாத்துகளும் தானாம். வாரத்திற்கு 10 கேஜி உணவு உட்கொள்ளும் இது மிகவும் சாதுவானதாம்! நீங்களே படங்களைப் பாருங்களேன்.
உண்மையில் மலைக்கத்தான் வைக்கிறது
ReplyDeleteஅரிய தகவலுக்கும் அபூர்வ படங்களுக்கும்
மனமார்ந்த நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள், திரு.ரமணி!
ReplyDeleteநிச்சயம் மலைப்பான விஷயம் தான்......
ReplyDeleteபடங்களுக்கும் செய்திக்கும் மிக்க நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு.வெங்கட்நாகராஜ்!
ReplyDelete