இந்தக் கணினி யுகத்தில், ஒரு திரைப்படத்தில் அதன் ஆக்ரமிப்பு எவ்வளவு என்பதை விளக்குவதே இன்றைய நமது விடியோ. (அது சரி, கணினி கலைச் சொல்லான ‘மோஷன் காப்ச்சர்’ என்ற வார்த்தை இன்றைய கடைக்கோடி ரஜினி ரசிகனுக்கும் தெரிந்திருக்கிறது என்பது தமிழனுக்குப் பெருமையா அல்லது!!!!!!!)
இந்த விடியோவைப் பொறுத்தமட்டில், இந்த மாதிரித் திரைப் படங்களை உருவாக்க எவ்வளவு அசுரத்தனமான கற்பனையும் உழைப்பும் பொதிந்திருக்கிறது என்பதையும் யோசியுங்கள்!
Boardwalk Empire VFX Breakdowns of Season 2 from Brainstorm Digital on Vimeo.
ஒருபுறம் தொழில்நுட்பம் பிரமிக்கவைத்தாலும் மறுபுறம் இவை எதுவுமே உண்மையல்ல என்ற எண்ணம் வந்துவிட்டால் எதையுமே ரசிக்கத்தோன்றாது. இப்போதெல்லாம் இந்த எண்ணத்தாலேயே சினிமா மீதான மோகம் குறைந்துபோய் படங்கள் பக்கமே போவதில்லை. போதாததற்கு நீங்களும் புண்ணியம் கட்டிக்கொள்கிறீர்கள்.
ReplyDeleteபடங்களைப் பார்க்கத்திரையரங்குகளுக்குப் போவதில்லை என்பது தமிழ்த் திரைக்குச் சரியான கணிப்பாக இருக்கலாம். அதற்கு முக்கியமான காரணம் கணினி சார்ந்த தொழில் நுட்பம் மட்டுமே என்பதை மறுக்கிறேன். ஏனெனில் தமிழ்ப் படத்தில் கணினி (க்ராபிக்ஸ்) குறைந்த அளவிலேயே உபயோகிக்க்ப் படுகிறது (எந்திரன் போன்ற சங்கர் படங்கள் விதிவிலக்கு). நம்மையெல்லாம் அரங்குக்கு வரவழைக்க வேண்டுமென்றே 2-டி யை 3-டி ஆக்கி பணம் பறிக்கும் டைடானிக் போன்றவற்றைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் அமுதவன்? வருகைக்கும் வலிய கருத்துக்கும் நன்றி!
ReplyDelete