Wednesday, March 28, 2012

மாமாவிடமிருந்து இன்னொரு வைரம்!

அண்மையில் இந்த அருமையான மெலடியைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. தானாகவே உடனே உங்கள் நினைவும் வந்தது. மாமா என்று (திரையுலகில்) எல்லாராலும் அழைக்கப் பட்ட கே.வி. மகாதேவன் 1965ல் இதயகமலம் படத்திற்காகப் போட்ட மெட்டு இது. சுசீலா அருமையாக, அனுபவித்துப் பாடியிருக்க, கண்ணதாசன் எழுதியிருக்கிறார். ரவிசந்திரன், கே.ஆர்.விஜயா, (செம்மீன்) ஷீலா நடித்திருந்தனர். படத்தில் கணிகைமனையில் ஷீலா, ரவிசந்திரனை நோக்கிப் பாட, அவரோ, விஜயாவை நினைத்துக் கொண்டிருப்பது போலப் படமாக்கி யிருப்பார்கள். இந்தப் படத்திலிருந்து ’மலர்கள் நனைந்தன பனியாலே’ மற்றும் ’உன்னைக் காணாத’ என்ற சுசீலாவின் பாடல்கள் இன்றும் உலவி வருகின்றன. அதே அளவு மென்மையான ’என்னதான் ரகசியமோ இதயத்திலே’ என்ற இன்றைய நமது செலக்‌ஷன் ஏனோ அத்தனை பிரபலமாகவில்லை!

வெறும் புல்லாங்குழல், சிதார் இவைகளுடன் மாமாவின் ட்ரேட்மார்க் தபலா கூட மிகவும் அடக்கி வாசிக்கப் பட்டிருக்கும் இப்பாடலை சுசீலாவே முழுக்க சொந்தம் கொண்டாடிவிட்டார்! நீங்களே கேட்டுவிட்டுச் சொல்லுங்களேன்!

6 comments:

  1. நல்ல பாடல்.... பகிர்வுக்கு நன்றி.....

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய ”எனக்கென்ன மனக்கவலை என் தாய்” என்ற பாடல் உங்களிடம் இருந்தால் பகிருங்களேன்....

    ReplyDelete
  2. நன்றி, திரு.வெங்கட் நாகராஜ்! அவசியம் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  3. ரொம்ப நாள் ஆச்சு இந்த பாட்டை கேட்டு! பகிர்வுக்கு நன்றி! :)

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, தக்குடு அவர்களே!

    ReplyDelete
  5. காலத்தால் அழிக்க முடியாதப் பாடல்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா செல்வம் அவர்களே! இந்தப் பகிர்வுகளில் கூடிய மட்டும் காலத்தால் அழிக்க முடியாத, அதிகம் பிரபலமாகாத பாடல்களைத் தான் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete